உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈட்டி முனை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

னும் அறிவால் உயர்ந்த உத்தமர்கள் - நேரிய வாழ்க்கையை உயர்த்துகின்ற, சிந்திக்கச் செய்கின்ற அறிவு நூல்கள் இயற்றும் போது, சுயநலக் கும்பல் தங்கள் வேலையைக் காட்டி வந்திருக்கிறது,

உலகெலாம் போற்றும் அற நூலாம் திருக்குறள் தீட்டியவர் - வள்ளுவ குலத்தில் வந்து நெசவுத் தொழில் புரிந்த அறிஞர் --- பார்ப்பனனுக்கும் புலைச்சிக்கும் பிறந்தவர் என்று கதைகட்டிவிட்டிருக்கிறார்கள். மனிதனே கோயில், அன்பே கடவுள் பரோபகாரமே மதம் எனத் 'திருமந்திரம்' கண்ட மூலர் - மாடுகள் மேய்த்து வாழ்ந்த இடையர் என்பதை ஒப்புக்கொள்ளத் துணியாத பச்சோந்திக் கும்பல் வடநாட்டிலிருந்து வந்த ஆரிய முனி செத்து விழுந்த இடையன் உடலிலே கூடுவிட்டுக்கூடு பாய்ந்து, கதறிய பசுகளுக்கு புல் வழங்கி, பின் ஆன்மாக்கள் உய்ய அருள் மொழி வழங்கினார் என்று அளந்திருக்கிறார்கள். இப்படி எவ்வளவோ - தகிடுதத்தங்கள் இலக்கிய கர்த்தாக்களைப் பற்றி! எல்லாம் இலக்கியம் தனிப்பட்டவர்களின் தெய்வீகவேலை என்று பரப்புவதற்காக.

காலம் இத்தகைய கும்பலுக்குச் சாவுமணி அடித்து வந்திருக்கிறது என்றாலும். ஆழக் குழி தோண்டிப் புதைத்து மேலே சமாதி எழுப்பவில்லை இன்னும்! குழிபறிக்கப்பட்டு வருகிறது. காலப் போக்கிலே சமாதியும் எழுப்பப்பெறும். விழிப்புற்ற புதுயுக மக்கள் எத்தர்களை போஷித்துக்கொண்டிருக்க மாட்டார்கள், தங்களை ஏமாந்தவர்களாக்கி தாம் உயர்ந்தோர் எனப்பகட்டி அலைகிற யாரையும் மனித சமுதாயம் வாழ்த்தி வணங்கிக் கொண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/14&oldid=1368011" இலிருந்து மீள்விக்கப்பட்டது