உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈட்டி முனை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

ராது. சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றி ஏற்றம் கொள்ள இயலாது என்பதை காலம் உணர்த்தி வருகிறது,

ஆயினும், பழமை விரும்பிகள் பலர், காசுக்குச் சொல்வளர்க்கும் சிலர், கனவுக்குக் கும்பிடு போடும் கூட்டம், காமத்தை பூஜிக்கும் பேயர்கள் அநாகரிகக் கற்பனைகளை, புராணப் புழுகுகளைப் போற்றிப்பாடும் பித்தர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

எழுச்சியுற்ற இளைஞரை, விழிப்புற்ற சமுதாயத்தை, மக்களை மனிதராய் வாழவைக்கும் அறிவு விருந்து அளிக்கத் துடிக்கின்ற சிந்தனையாளர்களைப் பற்றி புறம் பேசி, வசை பாடி, கெக்கலித்து, இலக்கிய சேவை செய்து விட்டதாக இறுமாந்து போகிறர்கள்.

உலகைப் பார்ப்பதில்லை. உண்மைகளை உணர்வதில்லை. காலவேகத்தைக் கருதுவதில்லை. கலாசார உயர்வை மதிப்பதில்லை. மக்களின் பண்பை எண்ணுவதில்லை. மொழியின் மேன்மையை நினைப்பதில்லை, விஞ்ஞானம் முன்னேறுவதை, அறிவு அகண்டமாவதை, ஆராய்ச்சிகள் பெருகி மல்குவதை ஆராய்வதில்லை. சரித்திரம் மாற்றியமைக்கப் பெறுவதை சிந்திப்பதில்லை. மண்ணோடு மண்ணாய் உழன்ற மக்கள் நிமிர்ந்து எழுந்து 'மனிதரில் மனிதர் நாமே' என்று உரிமைக் குரல் கொடுத்து, வெற்றி முழக்கம் செய்து வீறுகொண்டுவிட்டதைக் காண்பதில்லை.

குறுகிய எல்லைக்குள்ளே. எட்டடிக் குச்சுக்குள்ளே , நாலு சுவரின் நடுவிலே ஒடுங்கி, காப்பியும் சிகரெட்டும் வெற்றிலையும் புகையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/15&oldid=1368012" இலிருந்து மீள்விக்கப்பட்டது