ஆராய்ந்து வித்து தேடி, அதில் தங்கள் குள்ளக் கருத்துகளைக் கூட்டி புதுப்புராணம் சிருஷ்டித்து இலக்கியம்' என்று லேபிள் ஒட்டுகிறது ஒரு கும்பல். 'கம்பன் பாடியதில் இடைச் செருகல்கள் புகுந்து விட்டன; வெட்டித் தள்ளுவோம் என வம்புகள் செய்வதும், வம்பரைப் போற்றிப் புகழ்வதுமாக 'இலக்கிய சேவை' புரிகிறது ஒரு கும்பல்.
தீபாவளிக்கு மாமி வீடு சென்று புதுமனைவியைப் பார்த்துப் பல்லிளிக்கும் கயவர்களைப் பற்றிய கதைகள் டிராமிலும் பஸ்ஸிலும் முட்டி மோதிப் பின் தனியறையிலே கட்டிப் பிடித்தணைக்கும் காம நாடகம் ... 'காதல், காதல்’ என்று கண்ணடிக்கும் பெண்களையும் ஷோக் சுந்தரங்களேயும் சக்திக்கச் செய்யும் சதிகள் - இப்படிக் குப்பைக் கதைகள் மலைமலையாய் குவிகின்றன ஓர் புறம்.
களவாணித்தனமும், டம்பாச்சாரித்தனமும், இலக்கிய விபசாரமும் பெருத்து வருகிறது இன்றையத் தமிழகத்திலே.
புதுமை யில்லை. புதுயுகக் கருத்துக்களை வளர்ப் போர் அதிகம் இல்லை. சிந்திக்கத் துரண்டும் எழுத்து ஏராளமாகப் பிறக்கவிலை, சிந்தனை செய்து எழுதுவோருக்குப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால், கலை வளர வழியில்லை, அறிவு பெருக வழிகாட்டுவோர் இல்லை.
மேனி மினிக்கி, சதிர்த் தாசி போல சந்தையிலே மின்னுகின்ற பத்திரிகைகள் பெருத்துவிட்டன. அதிகமாகின்றன. ஆனால், விஷயத்தில் புதுமையில்லை. எழுச்சி தரும் எண்ணங்கள் அதிக மில்லை, நலம் பயக்கும் நயங்கள் நிறைய இல்லை. }}