உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

குயிற் பாட்டு

"வேடர்குலத் தலைவனாய வீரமுருகன் என்பானின் சீரிய மகளாகப் பிறந்து வளர்ந்து பருவமெய்திய சின்னக்குயிலியை அவளது உற்ற மாமன் மகனாகிய மாடன் மணஞ்செய்து கொள்ள மனங்கொண்டான். தேன்மலைக்குத் தலைவனாகிய மொட்டைப் புலியன் தன் மைந்தனாகிய நெட்டைக் குரங்கனுக்கு அவளைப் பெண் வேண்டினான். வீரமுருகனோ தன் மகளை நெட்டைக்குரங்கனுக்கே கட்டிக்கொடுக்க இசைந்தான். இச்செய்தி அறிந்த மாடன் மனம் புகைந்தான். அவனுக்குச் சின்னக்குயிலி ஆறுதல் கூறியகன்றாள்.

மணநாளுக்கு முன்னர் ஒருநாள் சின்னக்குயிலி, தன்னையொத்த தோழியருடன் மாலை வேளையிற் சோலை யொன்றிற் புகுந்து விளையாடிக கொண்டிருந்தாள். அப்போது மான் வேட்டை யாடிவந்து சேரமான் மைந்தனாகிய இளவரசன் சின்னக்குயிலியைக் கண்டு காதல் கொண்டான். அவளும் முன்னவன் மகனைக் கண்டு மாமோகம் கொண்டு நின்றாள்.

‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல’

என்பது உண்மையன்றோ! அவர்கள் ஓருடல் ஓருபிராயினர். தேனில் விழும் வண்டைப்போல, காந்தமிசை வீழும் காரிரும்பைப் போல, ஆவலுடன் அவளை அரகுமாரன் ஆரத்தழுவி இன்புற்றான். இவர்கள் கூடியிருக்கும் இன்பக் காட்சியை மாடனும் குங்கனும் ஓடி வந்து பார்த்து உள்ளங் கொதித்தனர். இருவரும் கோப வெறி கொண்டனர். இந்நிலையைக் கவிஞர் குறிப்பிடும் நயம் வியப்பிற்குரியது.

‘ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு
ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு’

மன்னவன் மகனைக் கொல்லுதற்கு மாடனும் குரங்கனும் வாளோங்கி வந்தனர். வேந்தன் முதுகில் இருவரும்