உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

 எ னு ம் அமெரிக்க உடற்கல்வி இயக்குனர் அவர்கள் ஆவார்கள்.

அமெரிக்காவில் உள்ள கோலியோக் கல்லூரியில் பணியாற்றிய அவர், ஒரு புதிய மன்மையான, அதே சமயத்தில் இதமான இனிமையான ஆட்டம் ஒன்றைக் கண்டுபிடிக்கின்ற ஓர் அவசியமான அவசர நிலைக்கு உந்தப்பட்டார்.

ஆழ்ந்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருந்த போது, 'மின்டன்’ (Minton) என்ற ஆட்டம் அவரது கவனத்தைக் கவர்ந்தது. அந்த ஆட்டம் ஜெர்மனியில் ஆடப்பெற்று வந்த ஃபாஸ்டுபால் (Faust Bail) எனும் ஆட்டத்தின் வழிமுறைகளைத் தழுவியதாகும்.

மின்டன் ஆட்டத்தில் பயன்பட்ட பொருட் கள் நீண்ட கைப்பிடியுள்ள மட்டைகள் (Bats),கம்பளி நூலால் ஆன பந்து, ஏழு அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த வலை.

அதனைக் கண்ணுற்ற மோர்கனுக்கு புதியதோர் யோசனை பிறந்தது. மட்டையை ஆட்டத்தில் நீக்கிவிட்டு, கையால் பந்தை அடித்தாடினால் நன்றாக இருக்கும் என்று நினத்தார். அதனையே முடிவாகவும் எடுத் தார். ஆனால் கையால் அடித்தாடுவதற்கேற்றவாறு பந்து இல்லையே! என்ன செய்வது? வி -2