இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
234
- வெள்ளிப் பணத்துக்கும்
- நல்ல குணத்துக்கும் வெகுதூரம்-இது
- உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும்
- ஒரு பாடம்!
- (வெள்ளி)
- ஒரு பாடம்!
- பிள்ளை யெனும் பந்த பாசத்தைத் தள்ளிப்
- பிரிந்தோடும்-தன்
- உள்ளத்தை இரும்புப் பெட்டகமாக்கித்
- தாள் போடும்!
- இல்லாதவர் எவரான போதிலும்
- எள்ளி நகையாடும்-இணை
- இல்லாத அன்னை அன்புக்குக் கூட
- சொல்லாமல் தடை போடும்
- (வெள்ளி)
- சொல்லாமல் தடை போடும்
- வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல்
- செல்வம் வரும் போகும்-இதை
- எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்குத்
- துன்பம் வரவாகும்!
- கள்ள மில்லாத அன்புச் செல்வமே
- என்றும் நிலையாகும்!
- கஷ்டம் தீரும் கவலைகள் மாறும்
- இன்பம் உருவாகும்!
- (வெள்ளி)
- இன்பம் உருவாகும்!
சபாஷ் மாப்பிளே - 1961
- இசை : K. V. மகாதேவன்