இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
293
- சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்
- திருமணமாம் ! - இரவில்
- சோளத்தட்டை பல்லாக்கிலே
- ஊர் வலமாம் !
- நொண்டிக்காலு நண்டுப் பொண்ணு
- நாட்டியமாம் !
- நுரைத் தவளை மேளதாள
- வாத்தியமாம்!
- தொண்டையில்லாக் கோட்டானும்
- சுதியை விட்டு பாடிச்சாம் !
- கண்சிமிட்டி மின்மினியும்
- காந்தலைட்டு போட்டுச்சாம் !
- நஞ்ச வயல் சேறு அங்கே
- சந்தனமாம்!
- நத்தாங் கூட்டுத் தண்ணிரே
- பன்னீராம் !
- புஞ்சைக் காட்டுக் குருவித் தழை
- போட்டுக் கொள்ள வெத்திலையாம் !
- வந்திருந்த கும்பலுக்கு
- சோறுமட்டும் பத்தலையாம் !
கைதி கண்ணாயிரம்
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: M. S. ராஜேஸ்வரி