பக்கம்:அன்பு மாலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அன்பு மாலை

கொண்டபொருள் அத்தனையும் கைவிட்டே ஓடும்,
கூடுகின்ற மூச்சடங்கும் காலத்தில் இவைதாம்
அண்டுகின்ற துணையாமோ? ஆகாவாம் கண்டீர்;
அருள்ராம சுரத்குமார் பாலேநீர் வம்மின். 3

வம்மினென்றே உலகத்தார் தமைக்கூவி அழைப்பேன்;
வருவிருந்து காத்திருக்கப் பசித்திருக்க லாமோ?
செம்மையுறு பொருளிதுவென் றேசொல்லி என்றும்
சிதையாத மாவின்பம் பெறுதற்காம் நெறியை
அம்மஇவன் பாற்சென்றே அடைதற்கும் ஆகும்;
அருணையினில் ராமசுரத் குமாராகும் யோகி,
செம்மலிவன் திருப்பாதம் அடைமின்கள்; அங்கே
சீர்பெறலாம், ஏர்பெறலாம்,சாந்தியினைப் பெறலாம். 4

செம்மல் - தலைவன். ஏர் - அழகு.


பெறலரிய பேறெதுவென் றாராய்ந்து நாளும்
பித்தரைப்போல் திரிந்தோங்கிப் பொருளினையே
உறவினர்கள் சுற்றத்தார் நண்பரென ஏங்கி [ஈட்டி
ஊர்ஊர்கள் தோறும்உழன் றுளச்சாந்தி இன்றிக்
கறவைமல டானதுபோல் வாழ்நாள்கள் வீணே
கழித்தொழித்து நில்லாமல் பெறும்பேறு சொல்வேன்:
திறமதுசார் அருணையினில் ராமசுரத் குமாரைச்
சேர்மின்கள்; அவன்காட்சி தனில்இன்பம் காண்பீர். 5

கறவை - கறக்க வேண்டிய பசு.


காண்பரிய காட்சியெல்லாம் காட்டுகின்றேன் என்பார்;
கனமுடைய பொருளைநான் வருவிப்பேன் என்பார்;
பூண்பெரிய எல்லாமும் மறைதற்கோர் நெறியைப்
பூட்டுவிப்பேன் என்பார்கள்: சித்துவிளையாட்டாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/18&oldid=1303375" இலிருந்து மீள்விக்கப்பட்டது