பக்கம்:அன்பு மாலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அன்பு மாலை


மணமாரும் மலரினிலே வண்ணமெலாம் ஆகி
மணத்துக்குள் அநுபவிக்கும் இன்பநலம் ஆகிக்
குணமாகிக் குணத்தினுக்கோர் சீகரமும் ஆகிக்
கூர்கின்ற இன்பத்துள் இன்பமே ஆகி
எணமெல்லாம் போக்குகின்ற உபசாந்தி ஆகி
ஏறுகின்ற ஏற்றமெலாம் தன்னுருவம் ஆகி
நிணம்மாறா உடல்கொண்டான் ராமசுரத் யோகி;
நினைப்பார்கள் உள்ளத்தே அமுதம்தந் திடுவான்.

135


கூர்கின்ற- மிருகின்ற, நிணம் - ஊன்.

யார்கண்டார், உலகத்தில் எங்கிருப்பான் ஞானி
என்றேதான் பலர்சொல்வார்; இவ்விடத்தே வந்து
நேர்கண்டு பார்த்திடலாம்; திருவருணை தன்னில்
நிலவுகின்ற ராமசுரத் குமாரிடத்தே சென்றால்
பார்ஒன்றும் ஒருஞானம் பலித்ததெனக் கண்டே
பாங்குடனே அவன்சிரிப்பில் மயங்கிவிடு வார்கள்;
ஊர்கண்ட மெய்இதுவாம்; உலகமெலாம் கண்டே
உவக்கின்ற உண்மையிதைக் கண்டேநீர் வம்மின்.

136


தழல்கண்டால் ஒளியிருக்கும்; தழலைத்தான் தீண்டில்
தன்கையைச் சுட்டுவிடும்; அதுபோல ஞானி
தொழல்கண்டால் நலமாகும்; குறும்புதனைச்செய்தால்
துயர்மிகவே ஆகும்; இதைக் கண்டிடலாம் இங்கே;
விழல்கண்டு மனமுருகி வருகின்றார் தமக்கு
மேன்மையுற நல்லுரைகள் சொல்கின்றான் அன்றே; அழல்கண்டால் தேற்றுகின்றான் ராமசுரத் குமாராம்
அவன்கண்டீர் பெருஞானி; இதுதிண்ணம் திண்ணம்.

தழல் - நெருப்பு, தொழல்கண்டால் - தொழுதால். விழல் - வணங்குதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/60&oldid=1303465" இலிருந்து மீள்விக்கப்பட்டது