பக்கம்:அன்பு மாலை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அன்பு மாலை


பழுக்கின்ற கனிபோலக் கசியும் நெஞ்சன்;
பார்வையிலே ஒளிவைத்துப் பார்க்கும் ஐயன்;
ஒழுக்கமிலா வன்பரெலாம் தூற்று கின்ற
ஒருவன்தான் ராமசுரத் குமாராம் அண்ணல்,

182


அழுக்கு உடையான்- அழுக்கேறிய உடையை அணிந்தவன், இழுது - நெய், வன்பர் - கொடியவர்.

பலகாலும் பயின்றாலும் நெஞ்சந் தன்னைப்
பலவாறே அலையாமல் அடக்கு தற்கு
நிலைகாணோம் எனஅஞ்சி மாழாந் தென்றும்
நினைந்துநினைந் திடர்கொண்ட நண்பீர் வம்மின்:
அலகேதும் இல்லாத கருணை யாளன்,
அவன்ராம சுரத்குமார் என்னும் அண்ணல்: சிலகாலம் கண்டீரேல் சாந்தி தந்தே
திகழ்விப்பான்:இது திண்ணம் திண்ணம் கண்டீர்.

183


மாழாந்து- மயங்கி, அலகு- அளவு,


கானத்தை மிகவிரும்பிக் கேட்பான்; நல்ல
கவிகளையே பாடுங்கால் உருகி நிற்பான்; பானத்தைப் பாலினையே வருவார்க் கெல்லாம்
பணிந்தருந்தி மிகவுகக்கும் செல்வன் கண்டீர்;
ஞானத்தை இவன்பாலே பெறலாம் என்று
நண்ணுவார் தமக்கினிய அருள்செய் கின்றான்,
ஈனத்தைப் போக்குகின்ற பெரிய யோகி
இவன்ராம சுரத்குமார் என்பான் கண்டீர்.

184

மாற்றறியாப் பசும்பொன்னே, மணியே என்று
வந்தஅன்பர் புகழ்கின்ற அண்ணல், என்றும்
தேற்றறியா மனமதனில் சாந்தி மேவச்
சிலசொல்லும் பேராளன்,
ஞானமூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/74&oldid=1303526" இலிருந்து மீள்விக்கப்பட்டது