பக்கம்:அன்பு மாலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அன்பு மாலை


னேன். அவற்றைப் பார்க்கிறவர்கள், அதன் கோணலைக் காணுவார்கள்.

ஆனால் கோணலிலேதானே அழகு இருக்கிறது? நேர்கோட்டில் அழகு இல்லை. வளைந்த கோட்டில்தான் சித்திரங்கள் அமைகின்றன. நேரான நடையில் அழகு இல்லை. கோணலான நடனத்திலேதான் அழகு இருக்கிறது. ஆகவே, நான் கோணலான ஒரு முகவுரையை எழுதியிருக்கிறேன். அந்தக் கோணலிலே மாணல் இருக்கிறதா என்பது படிக்கிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். ஒரு முன்னுரை, அதற்குப் பின்னாலே சென்ற ஆண்டு நான் நிகழ்த்திய சொற்பொழிவு, அதன் பின்னாலே அவ்வப்பொழுது நான் பாடிய பாடல்கள். எல்லாம் சேர்ந்து ஒரு புத்தகத்தை அவசரமாக நேற்றுச் சித்தம் பண்ணி இன்றைக்கு இங்கே கொண்டு வரும்படியாக அருள்பாலித்திருக்கிறார்கள், சுவாமிகள். அவர்களுடைய திருவடியிலே மலர் சாத்த அறியேன். அவர்களுடைய திருத்தோளிலே மாலை சாத்த அறியேன். அவர்களுடைய தலையிலே முண்டாசு கட்ட அறியேன். அவர்களுடைய இடையிலே ஆடை சாத்த அறியேன். ஆனாலும் நான் பாவாடை அணிந்திருக்கிறேன்: ஆணாகிய சுவாமிகளுக்குப் "பாவாடை” அணிந்திருக்கிறேன்! பூமாலை போடாவிட்டாலும் பாமாலை போட்டிருக்கிறேன். இவைகளெல்லாம் அன்பர்களுக்கு உகப்பாக இருக்கும். என்னுடைய பாட்டினுடைய பலத்தினாலே அல்ல. இந்தப் பாட்டு யாரைச் சொல்கிறதோ அவர்களுடைய நினைவினாலே, படிக்கிறவர்கள் எல்லாம் இன்பம் எய்துவார்கள்.

ஊதுவத்தி கறுப்பாய் இருக்கிறது. ஆனால் அதைக் கொளுத்தும்பொழுது மணம் வீசுகிறது. கறுப்பாக இருக்கிறதே. இது எதற்காக என்று யாரும் வெறுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/8&oldid=1303728" இலிருந்து மீள்விக்கப்பட்டது