பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

உம் : 8 குழுக்கள் போட்டியிடுகின்றன.

8 (8-1) ÷ 2 = 8 ×7÷2 = 56÷2 = 28

மொத்த போட்டி ஆட்டங்கள் 28 ஆகும்.

2. இரட்டை தொடர் வாய்ப்பு முறையில், எல்லாக் குழுக்களும், ஒன்றுக்கு ஒன்று இரண்டு தடவை போட்டி போடுகின்றன. மொத்த போட்டி ஆட்டங்களைக் கண்டு பிடிப்பதற்கான சூத்திரம் : n (n-1).

உம்: 8 குழுக்கள் என்றால் 8 (8-1) = 8x 7 = 56

தொடர் வாய்ப்புப் பந்தயத்தில் உள்ள நிறையும் குறையும்

நிறைகள்

1. போட்டியிடும் குழுக்களிலிருந்து, உண்மையான திறமைவாய்ந்த வெற்றிக் குழுவைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

2. அதிகமான எண்ணிக்கையில் போட்டி ஆட்டங்கன் நடைபெறுகின்றன.

3. குழுக்களின் திறமையை வரிசைப்படுத்த இது உதவுகிறது.

4. ஒரு வாய்ப்பு முறையில் நடப்பது போல, ஒரு குழு ஆடி ஜெயித்து வருகிற வரைக்கும், மற்ற குழுக்கள் வீணாகக் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆடுவதற்குத் தயாரர்க எந்த குழு இருக்கிறதோ, அதனுடன் ஆடிட முடியும்.