பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாமியாரும் மருமகளும்

75

வெள்ளாட்டி தன்னுட்னே
வேலைகளைச் செய்யும்என்றாள்.

கோட்டைக்குப் போன கணவன் வந்து பார்க்கும் பொழுது அந்தச் சிறுபெண் உடல் குலைந்து உள்ளங் குலைந்து நிற்கிறாள்.

கோட்டைக்குப் போயிருந்த
கொற்றவனார் வந்தபின்பு,
முத்துப்போல் கண்ணீரை
முகமெங்கும் சோரவிட்டாள்.
பவளம்போல் கண்ணீரைப்
பக்கமெங்கும் சோரவிட்டாள்.

பார்த்தான் கணவன். 'இந்தப் பெண்ணுக்கு இப்படி முகவாட்டம் உண்டாகக் காரணம் என்ன?' என்றுயோசித்தான். 'இவளுக்கு என்ன குறை?' என்று எண்ணிப் பார்த்தான். பெண்களுக்கு ஆசைப் பண்டம் ஆடையும் நகையுக்தானே? அகில லோகமும் பிரளய் முழக்கம் இருந்தாலும் அவர்கள் மேனியில் ஆபரணம் குலுங்கினால் அவர்கள் ஆனந்தக் கடலில் அமைதியாக மூழ்கியிருப்பார்கள். அவன் கேட்கிறான்:

என்னடி மாது
இனைப்புகள் தோணுது?
போட்டபணி போதாதோ?
புதுப்பணிகள் வேணுமோ?
இட்டபணி போதாதோ?
எதிர்ப்பணிகள் வேணுமோ?

அவள் பொன்னகை வேண்டுமென்று அழவில்லையே!தன்னை அன்பு காட்டிப் பாதுகாப்பாருடைய புன்னகையைத் தானே வேண்டி நின்றாள்? ஆகவே,