பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கலீலியோவின்

அடக்கி நசுக்கி ஒடுக்கிய பின்பே அந்தப் பாவமன்னிப்பை வழங்கப்படல் வேண்டும் என்று அந்தந்த நூற்றாண்டு வாழ் மக்கள் எண்ணி நடந்துவந்தார்கள்!

இந்த எண்ணம் கொண்ட மக்கள் மனம், அரிஸ்டாட்டிலின் மீதும் அப்படியே பற்றிப் பரவி இருந்தது! அதே மனம் கலீலியோ காலத்து மக்கள் இடையேயும் இருந்தது என்றால் அது என்ன ஆச்சரியப்படத்தக்க விஷயமா!

இந்த அரிஸ்டாட்டில் வாசம் பற்றிய மக்கள், கலீலியோவின் உண்மைகளை, அவர் தம் கருத்துக்களை எப்படி ஏற்பார்கள்? அவர் மீது அறிவுப் பொறாமை பிடித்தவர்களும் எப்படி அவரது உண்மை ஆய்வு முடிவுகளை வரவேற்பார்கள்? அதனால் ஆயிரமாயிரம் மக்கள் கலீலியோ கருத்துக்களை அரிஸ்டாட்டில் மோகத்தால் மறுத்தார்கள்!

உண்மைகளை ஏற்க மறுப்பவர்கள் பல்துறைகளிலே இருக்கிறார்கள் என்றால் என்னபொருள்? அவர்களுடைய அறிவை அவர்களே நம்ப மறுக்கிறார்கள் என்பதல்லவா உண்மை?

இவற்றை எல்லாம் எண்ணி யெண்ணிப் பார்த்த கலீலியோ, மன விரக்தி கொண்டு; தன்னை எதிர்ப்பவர்கள் அனைவர் மீதும் அவர் கோபப்பட்டார்! தன்னையும் தனது முடிவையும் கேலி பேசியவர்களை; அவர் ஏறெடுத்தும் பாராமல் அலட்சியப்படுத்தினார்!

கலீலியோவை மறுத்தவர்கள் யார் தெரியுமா? தலை பழுத்த அறிவுக் கணிச்சுவை முதியவர்கள்; வயது ஏறி ஏறி வயிரம் பாய்த்த நெஞ்சமுடையவர்கள்! அதாவது அக்காலப் பெரியார்கள்; மதவாதிகள்!

மதவாதிகளையும், பெரியார்களையும், சான்றோர்களையும் பழித்தால் அல்லது உதாசினப்படுத்தினால்,