பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

65


★ எந்தப் பொருளையும் ஊடுருவிப் பார்க்கும் டெலஸ்கோப் என்ற தொலை நோக்கிப் பார்வைக் குழாயும், அக்குழாய்களில் சிறிய பெரிய உருவங்களைக் காட்டும் வகைகளையும் இவர் கண்டுபிடித்தார்.

★ சந்திர மண்டல ஆராய்ச்சியை நடத்தி அவற்றின் மூலம் சந்திரனில் உள்ள பொருட்களைக் கண்டு பிடித்தார்!

★ நட்சத்திர இயக்கங்களின் நிலைகள் என்ன என்பதை அவர் உலகுக்கு விவரமாக விளக்கிக் காட்டினார்.

★ வியாழன் கோளை ஆராய்ச்சி செய்தார்! அந்த மண்டலத்துள்ளே நிலவும் நான்கு நிலாக்களைக் கண்டறிந்து உலகுக்கு புதிய ஓர் அற்புதத்தை எடுத்துரைத்தார்!

★ சூரிய மண்டலத்தை ஆராய்ந்தார். அதன் முகத்திலே நகரும் கரும்புள்ளிகள் என்ன? ஏன் அந்தக் கருப்புப் புள்ளிகள் சூரியனில் தோன்றின என்பதற்கான காரண காரியங்களைத் துல்லியமாக ஆராய்ந்து உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.

★ பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கோப்பர்நிக்கஸ் கோட்பாடு உண்மைதான் என்று உலகுக்கு உணர்த்தும் பரிசோதனை சாட்சியாக நின்றார்.

★ வியாழன் கிரகத்தில் துணை கிரகங்கள் உள்ளன என்பதை முதன்முதலில் கண்டறிந்து மிகப்பெரும் சாதனையை உருவாக்கிய முதன் மனிதரே கலீலியோதான்!

★ சூரியனை பூமி சுற்றி வருகிறது என்று உறுதியாக நம்பியவர் மாமேதை கலீலியோ. ஆனால் அவரை ஆணவம் பிடித்த மதவெறியும், மூடநம்பிக்கையும், பழமைப் பாசிபடர்ந்த நெஞ்சங்களும், பயமுறுத்தி, துன்புறுத்தி சொன்ன உண்மைகளை மறுத்து அறிக்கை விடுக்குமாறு பலாத்காரக் கட்டாயப்படுத்தினார்கள்.