பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞன் தன்பாழ்நிலையைக்
காட்டாமல் போட்டியிட்டான்.
கடவுள் உயிருடலேக்
களிமண்ணுல் அமைத்திட்டான்.
கவிஞர் தன் கவிதைகளைக்
கற்பனையால் சிருட்டித்தான்;
கடவுள் படைத்த வெலாம்
காலத்தால் மாறியது.
கவிஞன் படைப்புக்களோ
காலத்தை மீறியது.
கடவுள் இப்பந்தயத்தில்
கவிஞனிடம் தோற்றுவிட்டான்.
கவிஞன் தான் வெற்றி பெறக்
களிப்புடனே முன் வந்தான்.
கடவுள் தன் தோற்பஞ்சிக்
கண்காணு தோடிவிட்டான்.
கவிஞன்: "நான் உன் தீர்ப்பைக்
காதாரக் கேட்பற்குக்
கடவுளேப்போல் ஆலயத்துள்
காரிருளில் பதுங்காமல்
கருத்துடனே கேட்கின்றேன்:
காசினியே!பதில்கூறு;
கடவுள் உயர்ந்தவனோ?
கவிஞன் உயர்ந்தவனோ?
காசியே!பெரியவர் யார்?
கூசாமல் பதில் கூறு!... ”

31