பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

தாலாட்டு

குழந்தையோடு கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதென்றால் தாய்க்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகிறது. தாய் சொல்லுகின்ற அத்தனை வார்த்தைகளையும் பச்சைக் குழந்தை தெரிந்துகொள்ளுகிறதோ என்னவோ நமக்குத் தெரியாது. ஆனால், தாயின் அன்புப் பேச்சிலே குழந்தை இன்பங் காண்கிறது என்பது நிச்சயம்.

சிலவேளைகளிலே குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு அதற்குத் தாய் பாட்டுச் சொல்லுவாள். குழந்தைக்கும் தாய்க்குமே புரிகின்ற மழலைப் பாட்டுத்தான் அது.

தாய் காலை நீட்டித் தரையிலே உட்கார்ந்திருக்கிருள். நீட்டிய கால்களின் மேல் குழந்தை படுத்திருக்கிறது. அதற்கு இப்பொழுதுதான் ஏதேதோ குழறிக் குழறி ஒலியெழுப்பும் வல்லமை தோன்றியிருக்கிறது. இன்னும் வார்த்தைகள் சொல்லவராது. குழந்தை அவ்வாறு ஒலியெழுப்பி அதிலேயும் இன்பமடைகிறது. ஊ...ஊ என்றும், ஊங்கு...ஊங்கு என்றும் குழந்தை பேசுகிறது. இடையிடையே நாக்கை4