பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

உச்சிவேளை. வெய்யில், வெய்யில், ஒரே வெய்யில். பழநி மலையின் அடிவாரத்திலிருந்து உச்சிவரை "வேலும் மயிலும்" "சாமியே சரணம்" என்ற கோஷங்கள் முழங்குகின்றன.

மேலெல்லாம் திருநீறு பூசிய அடியவர்கள் மலையேறுகிறார்கள். வெய்யிலிலே வியர்வை பொங்கித் திருநீற்றைக் கரைத்துக்கொண்டு உடம்பெல்லாம் வழிகின்றது. அவர்கள் கால்கள் தளர்கின்றன. ஆளுல் அவர்களுடைய பக்தி தளர வில்லை. உடலிலே ஏற்படுகின்ற தளர்ச்சியையும் போக்கக் கூறியதாக ஒரு கானம் எங்கிருந்தோ கேட்கிறது.

ஏருத மலையேறி எருதுரண்டும் தத்தளிக்கப்
பாராமற் கைகொடுப்பார் பழநிமலை வேலவனே

வாழ்க்கைப் பாதையிலே நாம் போகிருேம். எப்படிப் போகிருேம்? இரண்டு எருதுகளைப் பூட்டிக்கொண்டு இந்த உடம்பாகிய வண்டியில் அந்தப் பாதையிலே போகிருேம். ஒரு எருதுதான் நமது நெஞ்சு அல்லது உள்ளம். உணர்ச்சிகளுக்கெல்லாம் நிலைக்களமாக இருப்பது. மற்ருெரு எருது மனம். சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் இடமாக இருப்பது.

உள்ளத்தையும் மனத்தையும் இரண்டு காளைகளாகக் கொண்டு பூட்டிய இந்த யாக்கையென்னும் வண்டியிலேறி வாழ்க்கைப் பயணத்தைச் செய்து கொண்டிருக்கிருேம். பயணமோ மலை உச்சியை நோக்கிச் செல்ல வேண்டியது. இந்தக் காளைகளில் ஒன்று சோர்வடைந்தாலும் பயணம் கெட்டுப் போகும்; நேராக நடைபெருது. இரண்டும் சோர்ந் தால் கேட்க வேண்டியதே இல்லை.

இப்படி எருதுகள் இரண்டும் தத்தளிக்கும்போது முருகன் பார்த்துக்கொண்டு வாளா இருக்க மாட்டார். அவர் கருணைக் கடல். அவரை அன்போடு நினைத்தால் கை கொடுத்து உதவுவார்.