பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாக்களும் வேதனைப்படுகின்றன. இக்காட்சி சாதாரணமாக நாம் எல்லோரும் பார்க்கின்ற காட்சி. ஆனால் நாம் சாதாரணமாகவே பார்க்கின்றோம். அவற்றினுடே நமது கருத்துப்பதிந்து சிந்திப்பதில்லை. இதே காட்சியைச் சித்தாந்த சிவநெறிச் செல்வராகிய மாதவச் சிவஞான முனிவர் பார்க்கிறார். இக்காட்சியைத் தம்முடைய கவிதையில் வைத்து ஒரு அழகான நுணுக்கமான சமயக்கருத்தை விளக்குகின்றார். அதாவது ஆன்மாக்கள் இயற்கையிலேயே மலத்தொடர்புடையன, சாதனைகளினால், வழிபாட்டால் ஆன்மா மெய்யுணர்வில் தலைப்பட்ட பிறகும் பழைய மலவாசனை தாக்கும். இதனை “இவ்வான் மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்புதின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்குமாகலின்” என்ற சிவஞான போதக் கருத்தால் அறியலாம். கசப்பு நிறைந்த வேம்பைத் தின்று பழகிய புழுவை இனிப்புடைய கரும்பினிடையே விட்டால் கரும்பைத் துய்க்காது பழக்கத்தின் வழி அது வேம்பையே தின்ன அவாவும் என்பதாகும். அதுபோல மெய்யுணர்வு தலைப்பட்ட கண்ணும் பழக்கத்தின் வழி மலவாசனைத் தாக்கும் என்ற கருத்தை மேற்சொல்லிய உவமையின் மூலம் விளக்குகின்றார். ஆழமான நுட்பக்கருத்து கவிதையைக் கேளுங்கள்.

“போதம் மேலாகப் பண்டே புல்லிய மலநோய் தீர்ந்தும்
வாதனை தாக்கு மாபோல்; மழைப்பெயப் மாறித் தீர்ந்து
காதல் செய்து உறையும் புள்ளும் மாக்களும் கவன்று நெஞ்சம்
நோதக மரங்கள் எல்லாம் நுன்துளி துவற்றும்மாதோ”

இத்தகைய கவிதைகள் சாவாப் புகழ் படைத்தவையாகும்.

உலகோர் எல்லோரும் ஓடி உழைக்கின்றார்கள், உரிமை முரசு கொட்டுகின்றார்கள், எதற்காக? பொருளுக்காக,