பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அரசியல் நெறியும் அறநெறியும் உணர்த்தும் காப்பியம்; தமிழர்தம் ஆற்றலை வடபுலம் உணருமாறு செய்த காப்பியம்; உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் அமைந்த படைப்பு; நீதிக்காக அரசை எதிர்த்துப் போராடும் உரிமை வழங்கிய காப்பியம். சிலம்பில் மரபுகளைக் கடந்த புதுமைகள் பல உண்டு. சிலம்பு செய்த புரட்சி போற்றத் தக்கது.

இலக்கியத்தைத் தொடங்கும்பொழுது கடவுளை வாழ்த்தித் தொடங்குதல் மரபு. ஆனால் சிலம்பு திங்கள், ஞாயிறு, மாமழை, பூம்புகார் ஆகியவற்றைப் போற்றித் தொடங்கப் பெறுகிறது. இஃதொரு புதிய நெறி.


திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றில்
வங்கண் உலகளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த வான்

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்கு நீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு
ஓங்கிப் பரந்தொழுக லான்

இளங்கோவடிகள் பாடிய இப்பாடல்கள் சோழனின் புகழை, சோழனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்திருப்பது எண்ணுதலுக்குரியது.

மக்கட் சமுதாய வரலாற்றில் அரசுகள் தோன்றியவுடன் வணிகர் சமுதாயம் தோன்றி வளர்கிறது. அரசுகளை விடக்