பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்ண உணவின்றிப் போராடுகின்றான்!. இது என்ன கொடுமை” என்ற கூற்று சமூகத்திற்குச் சரியான சவுக்கடி இதற்குத் தீர்வும் அருமையாகக் குறிப்பிடுகின்றார்கள். மனித உலகம் துன்பத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், மரணத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமானால் மனிதர்கள் துன்பம் இயற்கையன்று என்ற அறிவின் தெளிவைப் பெற வேண்டும்!” என்ற கூற்று நிதரிசனமானது.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” - இந்தச் சிந்தனை இந்நாட்டிற்குத் தேவையான ஒன்று. ஊரின் முன்னேற்றத்திற்காகச் சுண்டுவிரலை அசைக்காதவர்கள் கூட எங்கள் ஊர் என்று வீறாப்புப் பேசுகிறார்கள். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற சிந்தனை உலகமுழுவதற்கும் தேவையான ஒன்றாகும். கம்பனின் இராமகாதையின் அரசியலைப் புதிய கண்ணோட்டத்தோடு ..றுவது பெருமைக்குரியது. கம்பனின் இராமகாதையின் அரசுகள் நிலைபற்றிய விவாதம் அவசியமான ஒன்று. இராமனுக்கு முடிசூட்டுவிழா என்று கூறிய பொழுது அயோத்தி மக்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றார்கள். இராமனுக்கு வனவாசம் என்ற பொழுது மக்கள் அழுகின்றார்கள்; துன்பப் படுகின்றார்கள். சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையை ஒத்திருந்தது இராமனின் திருமுகம் என்று கூறுகின்றார். இலங்கை அரசில்,

‘களிக்கின்றார் அலால் கவல்கின்றார் இலர்’

என்ற வரிகளில் மக்களின் நிலைமையைச் சுட்டுகின்றார். இலங்கை மக்கள் துன்பம், இன்பம் என்று உணரவும்