பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமனும் சீதையும்

329



‘ஆற்றில் நீர் இல்லாதது ஆற்றின் பிழையன்று அதுபோல, இந்நிகழ்ச்சிக்கு தசரதனும் பொறுப்பல்லன். தசரதன் பிழையன்று-தம்மை வளர்த்த தாயாகிய கைகேயியின் மதியிலும் பிழையில்லை-பரதனின் பிழையுமன்று. விதியின் பிழையே’ என்று வெகுண்ட இலக்குவனுக்கு இராமன் ஆறுதல் கூறுகின்றான். இங்ஙனமிருக்கக் கைகேயிக்குத் தெரியுமென்றும் இராமனுக்குத் தெரியுமென்றும் கம்பராமாயணத்தில் இல்லாத ஒன்றை எடுத்துக் காட்டிக் கூறி விவாதிப்பதில் பயனென்ன? இக் குற்றச் சாட்டுக்குக் கம்பனின் பாடல் ஒன்றையே சான்றாகக் காட்டியிருப்பது வியப்பைத் தருகிறது. பாட்டுடைப் பொருள், குற்றச்சாட்டுக்கு உடன்பாடாக இல்லை. இராமன் கூறுவதாகக் கவிஞன் கூறும் பாடல்;


“வரனில் உந்தைசொன்
மரபி னாலுடைத்
தரணி நின்னதென்
றியைந்த தன்மையால்
உரனில் நீபிறந்
துரிமை யாதலால்
அரசு நின்னதே
ஆள்க வென்னவே!

அயோ. திருவடி. 111

இப்பாட்டுக்குப் பெரியார் பொருள் கொள்ளும்முறை தாம் கொண்ட முடிவுக்கு ஏற்றவாறு பொருள் காண்பதாக இருக்கிறதே தவிர பாட்டுக்குப் பொருள் காணும் முறையில் இல்லை. இந்தப் பாடல், இராமன் பரதனை நோக்கிக் கூறியது. சொல்லுமிடம் திருவடி சூட்டும் படலம். இந்த பாடலில் ‘வரனில்’ என்று குறிப்பிடுவது கைகேயி தசரதனிடத்தில் வாங்கிய இரண்டு வரத்தைக் குறிக்குமே தவிர,‘சுல்கம்’ தொடர்புடைய தன்று. தந்தை சொன்னதன் காரணமாகவும் தரணி உன்னது என்றும் குறிப்பிடுகின்றான்.

இ.V.22