பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எல்லாத் துறையிலும் புரட்சி! புரட்சி! புரட்சி! என்ற தலைப்பைச் சேர்த்திருக் கிறார்கன். கம்பன் காலத்தில் புரட்சி என்ற சொல்லே தமிழில் இல்லை. அந்தச் சொல்லை முதன்முதலில் தமிழுக்குத் தந்த கொடையாளன் நம்முடைய பாரதி என்பதை மறந்துவிடக்கூடாது. அவன்தான் முதன் முதலில் தமிழுக்குப் புரட்சி என்ற சொல்லை உருவாக்கிச் சேர்க்கின்றான்.

“ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி” என்று சோவியத் நாட்டில் எழுந்த புரட்சியை வரவேற்று எக்களிப்பிலே பாடுகின்றான் பாரதி. ஆக “புரட்சி” என்ற சொல் தமிழுக்கு வராமல் இருந்த பொழுதே கம்பன் எப்படி புரட்சிக் கவிஞனாக இருக்க முடியும் என்பது முதல் வினா.

புரட்சி என்ற சொல்லினால் மட்டுமே புரட்சி பற்றிச் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை. சில கொள்கைகள், சில கோட்பாடுகள் நீண்ட நெடுங்காலம் சமுதாயத்தில் உலா வந்திருக்கும். அதைப் பற்றி நாம் அக்கறை காட்டிக் கொள்ளாமலும் இருந்திருப்போம். ஆனால், பாரதி அப்படி ஒரு புதிய எண்ணத்தை நமக்குக் கொடுக்கிறான். ஆனால் கம்பன் தன்னுடைய காவியத்தின் மூலம் பல்வேறு செய்திகளை நினைவூட்டுகிறான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இன்னொன்று கம்பன் கழக நண்பர்கள், புரவலர்கள் அன்புகூர்ந்து நினைவில் கொள்ளவேண்டிய செய்தி. கம்பனைக் “கவிச்சக்கரவர்த்தி” என்று சொல்கிறீர்கள். ஆம்! கவி உலகத்திலே ஒரு முடிசூடா மன்னன் கம்பன்! அதனோடு உங்கள் மனம் அமைதி கொள்ளவில்லை. அவன் ஒரு தெய்வமாக்கவி என்றும் சொல்கிறீர்கள். கம்பனைக் கவிச்சக்கரவர்த்தி என்று நீங்கள் சொல்லுவதைவிட கம்பனை ஒரு தெய்வமாக்கவி என்று சொல்கிறபொழுது ஏதோ என்னிடத்தில் வலிமையாக நீங்கள் சிக்கிக்