பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ளுெமன் கோல் அன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூற வையமும்”

(மதுரைக் காஞ்சி; 489 - 492)

என்று கூறிப் பாராட்டுவதால் அறியலாம்.

சங்ககாலத் தமிழர் வாழ்வியலில் சமயப்பொறை இருந்தது. சமயச் சண்டைகள் இருந்ததில்லை. எல்லாச் சமயத்தினரும் வழிபடும் கடவுள் ஒன்றே என்ற விழுமிய கருத்துக் கால் கொண்டிருந்தது. பல்வேறு திருப்பெயர்களில் கடவுள் வழிபாடு இருந்தமையைச் சங்க காலம் உணர்த்தினாலும் “இந்தக் கடவுள்தான் உயர்ந்தது; அந்தக் கடவுள் தாழ்ந்தது” என்ற சண்டைகள் இருந்ததில்லை. குறிஞ்சிப் பாட்டில் கபிலர்,

“பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறுபல் உருவில் கடவுட் பேணி”

(குறிஞ்சிப்பாட்டு: 5 - 6)

என்று இயம்புகின்றார், பரிபாடல் ஆசிரியரும்,

“ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்!
எவ்வயி னோயும் நீயே! நின் ஆர்வலர்
தொழுதகை அமைதியின் அமர்ந்தோயும் நீயே!
அவரவர் ஏவ லாளனும் நீயே!
அவரவர் செய்பொருட் கரணமும் நீயே!”

(பரிபாடல் 4: 67-72)

என்று கூறுவதாலும் அறியலாம். சங்ககாலத் தமிழர் வாழ்வியலின் இனிய சமயப் பொறை இன்றும் வேண்டற்