பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

47


இத்தகு சிறந்த சங்க காலத் தமிழர் வாழ்வியலைச் சிந்தை குளிர, செவி குளிர டாக்டர் போப்பையர் தமது நாலடியார் மொழி பெயர்ப்பில் போற்றிப் புகழ்கிறார்.

“தமிழ் மக்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்னும் ஊக்கமுள்ளவர்கள்; நன்னெறி பற்றி ஒழுக வேண்டுமென்ற விருப்பமுள்ளவர்கள்; தன்னலமற்ற உண்மையான அன்புள்ளவர்கள்; உயர்ந்த நோக்க முள்ளவர்கள் என்று போப்பையர் வியந்து பாராட்டிய அனைத்துப் புகழும் சங்க காலத் தமிழர்க்கே உண்டு.