பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




5


நிலவுலகம் நிலைத்தற்கு அடிப்படை


புறநானூறு புறத்துறைபற்றித் தோன்றிய இலக்கியம். ஆனாலும் ஆங்கு அகநிலைபற்றிய அறநெறிச் சார்புடைய அறவுரைகள் இல்லாமலில்லை. புறநானூற்றில் சமூக நெறிவழி முறைகள் வலியுறுத்தப்படுகின்றன. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதிக்குப் புரவலனாகவும், புலவனாகவும் விளங்கிய பெருமைஉண்டு, மன்னன் இளம்பெருவழுதி உலகியலின் நடைமுறை “மன்னர் முடியில் இல்லை; படையில் இல்லை; பண்பாட்டில்தான் நிற்கிறது” என்று கூறிய பாடல் உலக இலக்கியங்களிலே சிரஞ்சீவித் தன்மை வாய்ந்தது ஆகும்.

இந்நிலவுலகம் இருந்தது; இருந்துகொண்டிருக்கிறது. இனிமேலும் இருக்கும்; இந்நிலவுலகத்தின் நிலையான தன்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் என்றும் இடையீடு இல்லை. இருக்கவும் முடியாது. நிலவுலகத்தின் உயிர் வாழ்க்கை ஆற்றொழுக்கனையது. இங்ஙனம் இடையறாது உலகியல் இயங்கிக் கொண்டிருப்பதற்கு அடிப்படை எது? ஆதாரம் எது?

இந்த நிலவுலகம், பல வல்லரசுகளைக் கண்டதுண்டு. ஆனால் அந்த வல்லரசுகளும் கூட நிலவுலகத்தைப் போல