பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 21

பத்துப்பாட்டு

நகைதாழ்பு துயல்வரும் வகையமை பொலங்குழை சேண் விளங்கு இயற்கை வான்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்ப. -பத். 1/36-90

முள் அரைத் தாமரை முகிழ்விரி நாட்போது கொங்குகவர் நீலச் செங்கட் சேவல் மதிசேர் அரவின் மானத் தோன்றும். பத். 3/183-185

மாரிக் குன்றம் மழைசுமந் தன்ன ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் பத்.-4/49.50

நீள் அரை இலவத்து இலங்குசினை பயந்த பூளை அம் பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற அணிலொடு. -பத். 6/84-85

பொன்எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்தஎம் பின்னிருங் கூந்தல். -பத். 9/59-60

மாமலை அணிந்த கொண்மூப் போலவும்

தாய்முலை தழுவிய குழவி போலவும்

தேறுநீர்ப் புணரியொடு யாறுதலை மணக்கும்.

-பத். 9/95-97

படுத்துவைத் தன்ன பாறை மருங்கில்

எடுத்துநிறுத் தன்ன இட்டுஅருஞ் சிறுநெறி.

-பத். 10/15-19

12.5. இல்பொருள் உவமை

இல்லாத பொருளை உவமையாகக் கொண்டு வந்து சித்திரிக்கும் அழகை இல்பொருள் உவமை என்பர். இதனைத் தண்டியலங்காரம் அபூத உவமை என்று கூறும்.

12.5.1. ஞாயிறும், திங்களும் ஒன்று சேர்ந்து மண்ணகத் திற்கு வருவது என்பது நடவாத ஒன்று; நிகழ முடியாத செயல் ஆகும். ஞாயிறும் திங்களும் ஒன்று சேர்ந்து இணைந்து பூமிக்கு வருதல் போலத் தமிழக மன்னர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பகை மன்னர்களை வென்றனர் என்று கூறப்படுகிறது.

1. தண்டி பக். 50.