பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 திருஞானசம்பந்தர் நீர் நிறைந்த சீர்காழி என்னும் தலத்தில் (உள்ளவர்) ஞான சம்பந்தர். உலகில் புகழ் மிகுந்த திருநெய்த்தானத்தில் உள்ள இறைவனை ஒப்பு இல்லாத பயன் மிகுந்த பாடல்களால் (பாடி உள்ளார்). இப்பாடல்கள் பத்தினையும் அறிந்தவர் முத்திச் செல்வத்தை அளிக்கும் சிவபெருமானுடைய திருவடி அடைவர்; சிவகதி பெறுவர். புனல் மல்கிய- water in plenty புகழ் – fame நிலம்–earth நெய்த்தானன்—Lord of Neyththanam Neyththanam is the name of a place. நிகர்இல்—without an equal பலம்—result பாடல்—Verses வல்லார்—well versed செல்வன்-Lord அடி—feet சேர்வர்—attain (will arrive at) Seerkazhi is surrounded by waters. Gnanasambandar has sung verses—without an equal on the Lord of Neyththanam who is famous on the earth. These ten verses yield good results. Those well-versed in them will attain the feet of the Lord and obtain Siva Bliss. திருத்தருமபுரம் திருச்சிற்றம்பலம் மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர் maadhar madappidiyum mada annamum annadhor நடை உடைம் மலைமகள் துணை என மகிழ்வர் nadai udaim malaimagall thunnai ena magizhvar பூத இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர். Butha inappadai nindru isai paadavum aaduvar அவர் படர் சடைந் நெடு முடியதோர் புனலர் avar padar sadain nedu mudiyathor punalar வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை Vedhamodu Ezhisai paaduvar aazhkadal venn thirai இரைந் நுரை கரை பொருது விம்மி நின்று அயலே irain nurai karai porudhu vimmi nindru ayalē