இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மிக்க உயர்ந்த பதவிகள் உள்ளன. நூலகத் தலைவர்களுக்கும் உதவியாளர்களுக்கும் உரிய ஊதிய முறைகள் உள்ளன. அவற்றை ஏற்படுத்தியது மத்திய அரசியலாரே.
1. நூலகத் தலைவர் :
- முதல் தகுதி - ரூ. 275-25-500-30-800.
- இரண்டாவது தகுதி - ரூ. 160-10-350.
- மூன்றாவது தகுதி - ரூ. 100-8-140.
2. உதவியாளர் :
- 1. உதவியாளர் (Assistant) - ரூ. 100-8-140-10-250.
- 2. இளம் உதவியாளர் (Junior) - ரூ. 80-5-120-8-200-10-220.
- 3. தொழில் நுணுக்க உதவியாளர் (Technical Assistant)- ரூ. 250-10-300-15-450--
25-500.
- 4. தொழில் நுணுக்க இளம் உதவியாளர் - ரூ. 160-10-300.
மாதமொன்றிற்கு ரூ. அறுநூறு முதல் ஆயிரம் வரை ஒரு சில முதல் வகுப்புப் பதவிகளுக்குத் தரப்படுகின்றன. தேசீய நூலகத் தலைவர்கள் உயர்ந்த ஊதியம் பெறுகின்றனர். பல்கலைக் கழக நூலகத் தலைவரின் குறைந்த அளவு ஊதியம் ரூ. 200-600 ஆகும்; அதிக அளவு ரூ. 600- 800. துணை நூலகத் தலைவர் ரூ. 150-250 பெறுகிறார். ஒரு சிலர் ரூ. 300-500ம் பெறுகின்றனர். மாநில நூலகங்களிலும், கல்வி நிலைய நூலகங்களிலும் தரும் ஊதிய முறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடுடையதாய் விளங்கலாம். எனினும் பிற அலுவலகங்களிலே ஒத்த நிலையும்,