பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கநூற் குறிப்புக்கள் 76#

எண்ணுர் மும்மதில் எய்த இமையா முக்கண் பண்ணுர் நான் மறை பாடும் பரம யோகி கண்ணுர் நீறணிமார்பன் கள்ளில் மேயான் பெண் ஞ ணும் பெருமான் எம்பிஞ்ஞகனே?

[1-1 i 8–1j

என வரும் ஆளுடைய பிள்ளேயார் திருப்பாடலாகும்.

குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமானுக்கு விருப்பமான பண், குறிஞ்சிப் பண் என்பதனே,

நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி . . . . . . . குறமகள் முருகிய நிறுத்து முரணி னர் உட் முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர் ’

என வரும் திருமுருகாற்றுப்படைத் தொடரால் அறிய லாம்.

' கருகுகுழல் மடவார்கடி குறிஞ்சியது பாடி

முருகன்னது பெருமையகர் முதுகுன் றடைவோமே

[1-12-10]

என வரும் ஞானசம்பந்தர் தேவாரம் மேற்காட்டிய திருமுருகாற்றுப்படைத் தொடர்ப் பொருளேப் பின்பற்றி அமைந்திருத்தல் காண லாம்.

முருகப் பெருமானே ச் கசடு கிழாளாகிய அம்மைக்கு மகன் எனப் போற்றும் முறையில்,

  • இழையணி சிறப்பிற் பழையோள் குழவி ’

என அழைத்தார் நக்கீரர். காடு கிழாளாகிய சக்தி யைத் தன் ஒரு பாகத்துக் கொண்டவன் சிவபெருமான் என்பது புலப்பட,

அணிகிளரன்ன தொல்லேயவள் பாகமாக

எழில் வேதம் ஒதும் அவரே . (4-8-8]