பக்கம்:பாரதித் தமிழ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்வதேச கீதங்கள்

இத்தலைப்புடன் வெளிவந்த நூலே பாரதியாரின் முதல் நூலாகக் கொள்ளலாம். பலரும் எழுதிய தேசபக்திபபாடல்களைத் தொகுத்து வெளியிட விரும்பி, அது குறித்து, 13-2-1906.இல் சுதேசமித்திரனில் விண்ணப்பம் விடுத்து அநேகமாக ஏமாற்றமடைந்த பாரதியார் தாமே இயற்றிய சிறந்தேசபக்திப் பாடல்கள் அடங்கிய இந்நூலை 1908-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியிட்டிருக்கிறார். இந்நூலின் முகவுரை பாரதியாரால் 10 ஜனவரி 1908-ல் எழுதப் பெற்றிருக்கிறது. இது பற்றி முதல் விளம்பரம் 21-1-1908-ல் மித்திரனில் வெளி வந்ததிலிருந்து இப்பாடல்களெல்லாம் 1907-லும் அதற்கு முன்பும் எழுதப்பட்டவை என்று தெரியலாம். இந்நூலின் விலை இரண்டணவாக இருந்தது.

இந்நூலில் இடம் பெற்றிருந்த பாடல்களாவன:

    1. வந்தே மாதரம் 
    2. வந்தே மாதரம் 
    3. நாட்டு வணக்கம் 
    4. எங்கள் நாடு 
    5. நடிப்புச் சுதேசிகள் 
    6. தொண்டு செய்யும் அடிமை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/124&oldid=1539917" இலிருந்து மீள்விக்கப்பட்டது