பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சின்னவளும், பெரியவளும்

தி தி

ணைக்காதே! விளக்கை அணைக்காதே!’ - அடித் தொண்டையில் அலறினாள் வள்ளி. அதில் மேலோங்கி ஒலித்தது அச்சம்.

‘ஏன்? ஏன் அணைக்கப்படாது?’ என்று கத்தினார் பெரியவர்: ஐந்து வயது வள்ளியின் தாத்தா அவர்.

‘பயமாயிருக்கு’

“என்னட்டி பயம்?’’

- w * . .

இருட்டைக் கண்டாலே எனக்கு பயம்தான். நீ விளக்கை அணைக்காதேயின்னா அணையாமல் இரேன்! இப்ப எதுக்கு விளக்கை அணைக்கப் போறே?’ என்று வாதாடினாள் அவள். -

‘விளக்கு எரிஞ்சா தூக்கம் வராது. அதுக்குத்தான்.”

பெரிதாக எரிந்து கொண்டிருந்த அரிக்கன் விளக்கின் திரியை உள்ளுக்குள் இறக்கிச் சுருக்குவதற்காக அவர் கையை நீட்டினார்.

அவள் அலறினாள்: “அணைக்காதே ஐயோ, அணைக் காதேயேன்: ‘ -