பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

யாடுவதையும் நாம் காண்கிறோம். ஹார்மோன்கள் வளர்ச்சியடைகிறபொழுதுதான் ஆண் பெண் வித்தியாசமே பெரிதுபடத் தொடங்குகிறது.

பெண்களின் தேக வளர்ச்சி 10 - 12 வயதில் தொடங்கி 16ம் வயதில் தேர்ச்சி பெற்றுக் கொள்கிறது.

ஆண்களின் தேக வளர்ச்சியோ 12 - 14 வயதில் தொடங்கி 20ம் வயதில் எழுச்சி பெற்றுக் கொள்கிறது.

எலும்பும் அமைப்பும்

ஆண்களுக்குரிய எலும்பின் அமைப்பானது நீண்டும், திரண்ட தன்மை உடையதாகவும், வலியதாகவும் அமைந்திருக்கிறது.

பெண்களுக்குரிய எலும்பானது, குட்டையாகவும், அதிகத் திரட்சி இல்லாத மென்மையுடையதாகவும் உள்ளது.

ஆண்களின் தோள் பட்டை எலும்பின் விரிவான அமைப்பு போல பெண்களுக்கு இல்லை.

பெண்களின் இடுப்புக்குக் கீழே அமைந்தபகுதி (Pelvis) சற்று அகலமாகவும் விரிந்துள்ளது போல,ஆண்களுக்கு இல்லை.