பக்கம்:வைணமும் தமிழும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வைணவமும் தமிழும்


இவர் திருமாலின் பரத்துவத்தைப் பலரும் அறிந்து மகிழுமாறு வாதம் செய்து நிலைநாட்டியதற்காக பாண்டிய மன்னனிடம் பொற்கிழி பெற்றுப் பட்டர்பிரான் என்ற விருதையும் பெற்றார்.

பாண்டியன் கொண்டாடப்
பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம்
எடுத்தூத- வேண்டிய
வேதங்கள் ஒதி
விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய
பற்று.[1]

என்ற வெண்பாவால் அறியலாம். இங்ஙனம் தான் பெற்ற பொருளைத் தம்மூர்த் திருமால் கைங்கரியத்தில் செலவிட்டு அப்பெருமானை - ஆலிலைப் பள்ளியானை - வழிபட்டு வாழ்ந்தார் என்பது குருபரம்பரைகளால் அறியப்பெறும் செய்தி. இதனை இவர்தம் திருவாக்குகளும் உறுதி செய்கின்றன.[2] இங்ஙனம் இவரது வரலாற்றோடு இவரது திரு வாக்குகள் பெரிதும் ஒத்துள்ளன.

இந்த ஆழ்வார் காலத்துப் பாண்டிய மன்னன் பூனிவல்லபன் என்பான்[3]

இப்பெரியார் காலத்தே இராச


  1. பாண்டிய பட்டர் அருளிச்செய்த தனியன் இவர் பிற்கால ஆசிரியர்களில் ஒருவர்.
  2. திருப்பல் 8,9, பெரியாழ். திரு 5,1:3.5.
  3. பெரியாழ் திரு 4-2;7 இதில் நெடுமாறன்"என்று ஆழ்வார் குறிப்பிடுவர். இவன் காலம் கி.பி. 835-862.