பக்கம்:வைணமும் தமிழும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வைணவமும் தமிழும்


கிரந்தங்களையுடையதாதலின் அத்தொகையளவில் 'ஒன்பதினாயிரப்படி' என்னும் இவ்வியாக்கியானம் எழுந்தது. இதுபற்றிய ஒரு சுவையான வரலாறு உண்டு.

வரலாறு இது: நஞ்சீயரின் ஆசாரியர் பட்டர். அவரிடம் ஆறாயிரப்படியை முறைப்படி கேட்டவர் நஞ்சீயர். அதனைச் சற்று விரிவாகச் செய்யத் திருவுள்ளம் பற்றினார். இதனைத் தம் ஆசாரியரிடம் விண்ணப்பித்து அவர்தம் இசைவு பெற்று ஒன்பதினாயிரப்படி என்ற இதனை அருளிச் செய்தார். பட்டர் திருநாடலங்கரித்த பின்னர் ஆசாரிய பதவி நஞ்சீயரை வந்தடைந்தது. இந்த ஒன்பதாயிரப்படியை செவ்வைப்படியாக எழுதித் தரும் பொறுப்பு இவர்தம் சீடர்களில் ஒருவரான ‘நம்பூர் வரதராசர்' என்பாருக்குத் தரப்பட்டது. அவரும் தம் ஊரில் இதனை எழுதிக் கொண்டு வருவதாகச் சொல்லி அதனை வாங்கிச் சென்றார்.

சென்றவர் காவிரியைக் கடந்து செல்லும்போது ஓரிடத்தில் நீரில் நீந்திச் செல்லும் நிலை வந்தது. பட்டோலையைத் தலையில் கட்டிக்கொண்டு நீந்திச் செல்லுகையில் அது எப்படியோ வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. கரையை அடைந்த இவர் அவ்விழப்புக்கு மிகவும் வருந்தினார். வீட்டினை அடைந்தவர், நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு தம் திருவாராதனப் பெருமாளுக்குச் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து, தாம் மாத்திரம் உணவு கொள்ளாமல் சயனித்துக் கொண்டார். அந்த இரவில் திருவரங்கத்து இறைவன் அவர் கனவில் எழுந்தருளி ”அன்பனே, ஏன் வருந்துகின்றாய்? உன்னுடைய ஆசாரியனை முன்னிட்டு கொண்டு நீ எழுதத் தொடங்கினால் நாம் உனது