பக்கம்:வைணமும் தமிழும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ உரைவளம்

135


விளக்கமாகவும் இருக்குமாறு 'பன்னீராயிரப்படி' என்ற வியாக்கியானத்தை அருளிச் செய்தார்.

4. இருபத்து நாலாயிரப்படி : இந்த வியாக்கியானத்தை அருளிச் செய்தவர் பெரியவாச்சான் பிள்ளை.

நம்பிள்ளை தம்முடைய நல்லருளா லேவியிடப்
பின்பெரிய வாச்சான்பிள் ளையதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலா யிரம்[1]

என்று உரைப்பர் மணவாளமாமுனிகள். 'இராமாயணம்’ இருபத்து நாலாயிரம் சுலோகங்களையுடையது. அத் தொகையளவில் இவ்வியாக்கியானம் எழுந்தது. நம் பிள்ளையின் நியமனத்தால் ‘வியாக்கியான சக்கரவர்த்தி’ என்று வழங்கும் பெரியவாச்சான் பிள்ளை பற்றியும் சுவைமிக்க வரலாறு ஒன்று உண்டு.

வரலாறு இது : நம்பிள்ளை கூரத்தாழ்வானுடைய[2] திருப்பேரனான நடுவில் திருவீதிப் பட்டருக்குத் திருவாய் மொழியின் வியாக்கியானத்தை தனியாக அருளிச்செய்து கொண்டு வந்தார். பகலில் கேட்டவற்றையெல்லாம் ஒன்று கூடக் குறையாமல் இரவில் எழுதி வந்தார். நூலும் முடிந்தது. இவர் எழுதியதும் முடிந்தது. எழுதியவற்றைப் பட்டர் ஒருநாள் பிள்ளையவர்களின் திருமுன் வைத்து விவரத்தைச் சொன்னார். ஏட்டினை அவிழ்த்துப் பார்த்த பிள்ளை அது மகாபாரதத்தின் தொகையளவில் இலட்சத்து இருபத்தையாயிரம்


  1. உ.ர.மா.43
  2. இவர் இராமாநுசருடைய முதன்மைச்சீடர்.