பக்கம்:வைணமும் தமிழும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

வைணவமும் தமிழும்


திவ்வியதேசத்தில் பெருந்தேவித்தாயார் சந்நிதி மண்டபம், திருமஞ்சன மண்டபம் முதலியவற்றைக் கட்டிப் பகவத் விஷயத்திற்கு ஒர் அரும்பதவுரை எழுதச்செய்தார்.திருவரங்கம் பெரியபெருமாளுக்கு அடையவளைந்தான் மதில்போலே - பகவத் விஷயத்திற்கு இது இரட்சகமாயிருந்ததாலே அடைய வளைந்தான் அரும்பதவுரை என்ற திருநாமம் சாற்றி அதனை இலக்கிய உலகில் புகழோங்கச் செய்தார். இதுதவிர, ‘திருப்பல்லாண்டு வியாக்கியானம் அரும்பதம்’ என்ற நூலும் இவருடையவை.

(12). பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் :அழகியமன வாளதாசர் என்ற மாற்றுப்பெயரினையுடையவர். சோழ நாட்டில் திருமங்கை என்னும் பகுதியில் தோன்றியவர். சிறந்த வைணவ பக்தர்."மறந்தும் புறந்தொழா மாண்புடையவர்.பெரிய திருமலைநாயகன் அரசவையில் பணியாற்றியவர். அவ்வரசன் இவரது திருமால் பக்தியைக் கண்டு உகந்து, திருவரங்கத்தில் தங்குவதற்கு ஒர் இருப்பிடம் அமைத்துத் தந்ததுடன், நாடோறும், தளிகைப் பிரசாதமும் கிடைக்க ஏற்பாடும் செய்தருளினன். அய்யங்காரும் கோயிலில் எழுந்தருளியிருந்த காலத்தில் “திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவரங்கக் கலம்பகம், சீரங்கநாயகர் ஊசல், திருவேங்கட மாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி” என்னும் எட்டுப் பிரபந்தங்களைப் பாடி யருளினார். (அஷ்ட பிரபந்தம்) வைணவ நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர் என்பதும் சம்பிரதாயங்களைத் தெளிவாக அறிந்தவர் என்பதும், அவருடைய நூல்களால் புலனாகின்றன. பாடல்களின் இனிமை கருதி வைதிக சமூகம் இவருடைய