பக்கம்:வைணமும் தமிழும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

வைணவமும் தமிழும்


(4). கிடாம்பி ஆச்சான்: கண்டாம்சம் திருநட்சத்திரம்: சித்திரையில் அஸ்தம், பெரிய திருமலைநம்பிக்கு மருமகன். குமாரர் : இராமாநுசப்பிள்ளான். திருக்கோட்டியூர் நம்பி நியமனத்தால் மடப்பள்ளி கைங்கரியம் செய்தவர். சாத்திர ஞானம் மிக்கவர். வயது 100.

(5). வடுக நம்பி : உடையவரின் சீடர், ஆசாரியரைத் தவிர வேறு தெய்வம் அறியாதவர்.உடையவருக்குப் பர்லமுதம் காய்ச்சித் தரும் சேவையைப் புரிந்தவர். ஒருநாள் பெரிய திருநாளில் பெரிய பெருமாள் வீதி உலாவில் இவர் திருவாசல் முன்பு எழுந்தருள,உடையவர் பெருமாளைச் சேவிக்க வருக என்று அழைக்க, இவரும் ‘அடியேன் தேவருடைய பெருமாளைச் சேவிக்க வந்தால் என்னுடைய பெருமாளுக்குப் பாலமுதம் கும்பிப்போகும். ஆதலால் இச் செயலைத் துறந்து வரமுடியாது’ என்று விண்ணப்பித்தாராம். எம்பெருமானாருக்கு இவர் எண்ணெய்க் காப்பும் சாத்தியருள்பவர். -

(6). 'மிளகாழ்வான் : இராமாநுசர் நியமனம் செய்த 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். திருவானைக்காவில் இலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டின பாலைக் கொண்டு ததியாராதனத்தில் சேர்ப்பிப்பதை அறிந்த இவர் அப்படிச் செய்யலாகாது எனத் தடுத்தவர். பிரசாதத்திற்கு உரலில் துணுக்காமல் முழு மிளகைப் பயன்படுத்தியதைக் கண்ட உடையவர் காரணம் வினவினார். தேவதாந்தரம் சம்பந்தப் படாமல் மிளகைச் சேர்ந்ததாக மறுமொழி பகர்ந்தார். மிளகாழ்வான். இலிங்கமும் குழவியும் இவர்மனத்தில் சிவபரமாகக் காட்சியளித்ததைக் கண்ட உடையவர் இவருடைய பக்திக்கு வியந்தார்.