பக்கம்:வைணமும் தமிழும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சமயத் தத்துவம்

191

இனத்தைச் சேர்ந்த ஐந்து எழுத்துகளால் ஞானேந்திரியங்கள் ஐந்தும்; த இனத்தைச் சார்ந்த ஐந்து எழுத்துகளால் ரூபம், சத்தம், மணம், சுவை, ஸ்பர்சம் (ஊறு) ஆகிய ஐந்தும் ‘ப’ இனத்தைச் சார்ந்த முதல் நான்கு எழுத்துகளால் மனம், அகங்காரம் மகத் தத்துவம், மூலப்பிரகிருதி ஆகிய நான்கும்: இவ்வினத்தைச் சார்ந்த 25-ஆம் எழுத்தாகிய மகாரத்தால் ஆன்மாவும் சொல்லப் பெறுகின்றன.

படைப்பு வகைகள் : எம்பெருமான் அண்டத்தைப் படைத்து அதற்குள் நான்முகனைப் படைத்தல் சமஷ்டி’ சிருஷ்டி என்று வழங்கப்பெறும் இதனை அத்வாரக'சிருஷ்டி’ என்றும் கூறுவர். நான்முகன் வாயிலாக இந்த அண்டத்திற்குட் பட்டபதினான்கு உலகங்களையும் தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் முதலியவற்றைப் படைத்தல் வியஷ்டிசிருஷ்டி எனப்படும். இது சத்வராக சிருஷ்டி எனவும் வழங்கப்பெறும். நான்முகனுடைய முகம், புயம் துடை, கால்களில் முறையே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப் பிறந்த சத்துவ இராசச, தாமசகுனங்களை உடையவரான சேதநர்களைப் படைத்தல் மிச்ரசிருஷ்டி என்று கூறப்பெறும்.

அண்டங்கள் : இவை அசித்தின்பாற்பட்டவை. எம்பெருமான் படைத்த அண்டங்கள் எண்ணிறந்தவை.

          அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
          அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
          ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகளின்
          நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன


8. திருவா. திருவண்டப்பகுதி (1-4) அடிகள் 3.