பக்கம்:வைணமும் தமிழும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சமயத் தத்துவம்

203


பிள்ளை உலக ஆசிரியரின் விளக்கம் : இந்த ஐந்து நிலைகளையும் பிள்ளை உலக ஆசிரியர், ...

     “பூகத ஜலம்போலே அந்தர்யாமித்துவம்; ஆவரன
      ஜலம் போலே பரத்துவம்; பாற்கட்ல் போலே
      வியூகம்; பெருக்காறு போலே விபவம்; அதிலே
      தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்” 17

       [பூகதம் பூமிக்குள்ளே இருக்கின்ற ஆவரணம் மூடிக்
       கொண்டிருப்பது]

என்று அழகாக விளக்குவர்.

இந்த வாக்கியத்தில் பரத்துவம் முதலான எம் பெருமானின் நிலைகளின் அருமையையும் அர்ச்சாவதாரத்தின் எளிமையையும் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குவர். இந்த ஆசாரியப் பெருமகனார்.

தண்ணிர் வேட்கை கொண்டவனுக்கு வேறு இடங்கட்குச் செல்லவேண்டாதபடி தண்ணிர் தான் நிற்கும் இடத்தில் பூமிக்கடியில் இருந்தாலும் கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்கக்கிடைக்காதிருப்பதைப் போல, எம்பெருமானைக் கண்டு பற்றவேண்டும் என்ற அவா இருந்தும் கட்கீலீ’18 என்று நம்மாழ்வார் குறிப்பிட்டபடி கண்களால் காணமுடியாதவாறு அட்டாங்க யோகமுயற்சியால் மட்டிலும் காணக்கிட்டுபவன் அந்தர்யாமித்துவ நிலையிலுள்ள இறைவன். அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது”19 என்று பரகாலர் கூறியபடி இந்த லீலாவிபூதிக்கு (படைப்பு, ஆழிப்பு முதலான விளையாட்டிற்குரிய உலகங்17. பூநிவச.பூஷ.42

18.திருவாய் 7.2:3

19. திருநெடுந் 1417. பூநிவச.பூஷ.42

18.திருவாய் 7.2:3

19. திருநெடுந் 14