பக்கம்:வைணமும் தமிழும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

225


சாற்றும். இதனைத் திருமந்திரம் குறிப்பிடுவதாக நம் முன்னோர்கள் உரைத்துப் போயினர்.

‘ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். இதில் மூன்று பதங்களும் எட்டெழுத்துகளும் அடங்கியுள்ளன என்பதை நாம் அறிவோம்.

பரமான்மா-சீவான்மா உறவுகள் அடியிற் கண்டவாறு அமைந்துள்ளன.

அகாரத்தினால்; (i) தந்தை தனயன் என்ற உறவும்: (ii) இரட்சிப்பவன்.இரட்சிக்கப்படுபவன் என்ற உறவும்; அகாரத்தின் மீது ஏறி மறைந்து கிடக்கும் (தொக்கி நிற்கும்) ஆய’ என்ற நான்காம் வேற்றுமை உருபினால் (லுப்தசதுர்த்தியிலல்), .

(iii) சேஷ-சேஷி (அடிமை-அடிமைகொள்பவன்) என்ற உறவு சொல்லப் பெறுகின்றது.

உகாரத்தினால், (iv) நாயக-நாயகி சம்பந்தம் நவிலப் பெறுகின்றது. மகாரத்தினால் (v)அறிபவன் - அறியப்படும்பொருள் உறவு உரைக்கப் படுகின்றது. நமஸ்ஸாலே: (vi) சொத்து - சொத்துக்குரியவன் (ஸ்வ-ஸ்வாமி) சம்பந்தமும்;

நாரபதத்தாலே;