பக்கம்:வைணமும் தமிழும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

235


உரியவனிடத்தில்எம்பெருமானையும், செல்வத்தின் இடத்தில் தம்மையும் வைத்து விளக்குவர் ஆழ்வார்.

(vii) சரீர-சரிபாவனை: இது உடல்-உயிர் உறவு என்று உரைக்கப் பெறும். வைணவதத்துவத்தில் இது உயிராயது. சித்து (சேதநம்) என்ற தொகுதியிலுள்ள மூன்று வகை ஆன்மாக்களும்’ அசித்து (அசேதநம்) என்ற தொகுதியிலுள்ள மூன்று வகைப் பொருள்களும்13 எம்பெருமான் திருமேனியில் அடங்கியிருக்கும். அதாவது சித்தும், அசித்தும் எம்பெருமானுக்கு உடலாக இருக்கும். இதுதான் ‘சரீர-சரீரி பாவனை' என்று வழங்கப் பெறுகின்றது.

விளக்கம் : உயிர் உடலிலிருந்து அதனை தரிக்கச் செய்கின்றது. உயிரின்றேல் உடல் வீழ்ந்து விடுதல் கண்கூடு. மேலும், உயிர்தான் உடலை இயக்குகின்றது. உயிர் உடலுக்குத் தலைவனாக உள்ளது. அங்ஙனமே இறைவன் எல்லாப் பொருள்களில் இருந்து அவற்றை தன் விருப்பம்போல் நடத்தி அவற்றிற்குத் தலைவனாகவும் உள்ளான்.ஆயினும், உடலினுள் உயிர் இருப்பதற்கும் எல்லாப்பொருள்களினுள் இறைவன் இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. உயிர் அணு அளவினதாய் உடம்பினுள் ஒரிடத்திலிருந்து கொண்டு தன் ஞானத்தால் (தர்மபூத ஞானத்தால்) உடல் முழுவதும் பரவி இவ்வுடம்பைப் பற்றிய நிகழ்ச்சிகளை உணர்த்துகின்றது. இறைவன் அங்ஙன மின்றி ஒவ்வொரு பொருளுள்ளும் முழுவதும் தன் சொரூபத்தோடு வியாபித்துள்ளான். அன்றியும், உடலினுள்


12. பத்தர் (தலைப்பட்டவர்), முத்தர், நித்தியர் என்பவர்கள்.

13. சுத்த சத்துவம், மிச்ரதத்துவம், சத்துவசூனியம் (காலத் தத்துவம்) என்பவை.