பக்கம்:வைணமும் தமிழும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

241



(2) ஆன்மாவின் இயல்பு என்பது நித்தியர், முக்தர், பத்தர் (தளைப்பட்டிருப்பவர்), கேவலர், முமுட்சுகள் என்று ஐந்து.

(3) ஆன்மா அடையும் பயன் என்பது புருஷாாத்தம், புருஷனால் (ஆன்மாவால்) அடையப்படும் பொருள் (= அர்த்தம்) அதுதான் அறம்(தர்மம்) பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆன்மாதுபயம், பகவதநுபவம் என்று ஐந்து.

(4) ஆன்மா அப்பயனை அடைவதற்குரிய வழிகள் என்பன: கர்மம், ஞானம், பக்தி, பிரபத்தி, ஆசாரிய அபிமானம் என்று ஐந்து.

(5) அப்பயனை அடைவதற்குத் தடையாய் (விரோதிகளாய்) உள்ளவைகள் என்பன. சொரூப விரோதி, பரத்துவ விரோதி, புருஷார்த்த விரோதி, உபாய விரோதி, பிராப்தி விரோதி என்ற ஐந்து.

         பராசர பட்டர் என்ற ஆசாரியப் பெருமகனார்,

         மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
         தக்க நெறியும் தடையாகித்-தொக்கியலும்
         ஊழ்வினையும் வாழ்வினையும் ஒதும் குருகையர்கோன்
         யாழின்இசை வேதத்து இயல்.
(திருவாய்மொழித் தனியன்)

என்று விளக்குவர். இந்த அர்த்த 'பஞ்சகத்தை'. இதில் (1) 'மிக்க இறை நிலை' என்பது ஈசுவரனின் இயல்பு; (2) மெய்யாம் உயிர் நிலை என்பது ஆன்மாவின் இயல்பு; (3)'தக்க நெறி' என்பது ஆன்மா அடையும் வழி; (4) தடையாகி தொக்கிலும் ஊழ்வினையும் என்பது அப்பயனை அடைய விரோதிகளாய்