பக்கம்:வைணமும் தமிழும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

வைணவமும் தமிழும்


வகையாலும் விஞ்சின கண்ணபிரானைப் பாடாது திருப்பாற்கடல்நாதனைப் பாடுவதாகச் சொல்கின்ற கருத்து கிருட்டிணனையும் தம்மையும் நோக்கிப் பண்டே அதிக ஐயம் கொண்டிருக்கின்ற இடையர் தமக்குத் தீங்கு செய்யக்கூடும் என்ற அச்சத்தினால் என்க.

'ஓங்கி உலகளந்த' (3) என்ற மூன்றாம் பாசுரத்தில் வாமனனாகித் திரிவிக்கிரமனான விசுவருபத்தைக் குறிப்பிடும் போக்கில், - ~

       ஓங்கி உலகளந்த
           உத்தமன் பேர் பாடி

என்று குறிப்பிடுகின்றான். ‘உத்தமன்பேர்’ என்பதால் ‘நாராயணன்' என்ற பரத்துவ நினைவும், வியூகத்தில் சொல்லும் உடையவர்களாக விபவத்தைப் பாடி, பகவானை எப்படி மனத்தில் பாவித்துக் கொண்டுள்ளோமோ அந்தப்பாவைக்குச் சாற்றி நீராடல் வேண்டும் என்று மனம்மொழி செயல்களால் இது பகவானுடைய ஆராதனமே என்பதை தெளிவு படுத்துகின்றாள்.

‘ஆழிமழைக்கண்ணா' (4) என்ற நான்காம் பாசுரத்தில் அவன் மேற்கொண்ட செயலை இட்டு அழைக்கின்றனர். 'பகவானுக்கு அடிமைப்பட்ட பாகவதர்கட்கு மற்றைத் தேவர்கள் அடிமை செய்பவர்கள்' என்பது சாத்திர சித்தம். ஆகவே மழைக்கு அதிதெய்வமான வருணன் பரமபாக வதைகளான இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் சொன்னபடி மழை பெய்ய வேண்டும் என்று கையோலை செய்து கொடுக்கின்றார்கள்.