பக்கம்:வைணமும் தமிழும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

வைணவமும் தமிழும்


என்ற பாசுரப்பகுதியில் எம்பெருமானைச் சித்தோபாயமாகப் பற்றிப் பயன்பெற்றதைக் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு மகிழலாம்.

நாயக-நாயகி பாவனையில் வரும் மகள்.பாசுரங்களில் இந்தச் சித்தோபாயம் சிறப்புற்று ஓங்கியிருப்பதைக் கண்டு களிக்கலாம். பெற்றோர். அல்லது உறவினர் கூட்டக் கூடுகையின்றியே தலைவனுடன் தானாகவே இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவனுடைய ஒப்புயர்வற்ற வனப்பு முதலியவற்றில் ஈடுபட்டு இருப்பவள் மகள். குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் அவனைக் கிட்டி அல்லது நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன், என்ற பதற்றத்தை உடையவள் இவள் காலக் கழிவினை இவளால் பொறுக்க முடிவதில்லை. திருமந்திரத்தில் பிரணவத்தாலும், நமஸ்ஸாலும் எல்லோருக்கு சேஷி (தலைவன்) என்றும், சரண்யன் (பாதுகாப்பவன்) என்றும் அறுதியிடப்பெற்றவன் எம்பெருமான்; எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவனும் அவனே. பிரணவத்தாலும், நமஸ்ஸாலும் இவை உணரப்பெற்றபின்பு 'நாராயண’ என்ற சொல்லினால் உறுதிப்பெற்றுள்ள எம்பெருமானுடைய சொரூபம் இயல்பு உருவம், குணம், விபூதி முதலியவற்றின் சேர்க்கையாலுள்ள பெருமையை நினைந்து மகிழ்ந்திருப்பவன் - இவன். எம்பெருமான் சாத்தியோபாயமாக இருந்தால் தான் செய்யும் சாதனங்கள் முடிவுற்ற பிறகே சாத்தியமாகின்ற பேறு கிடைக்ககூடும் என்று பொறுத்திருக்கலாம். ஆனால் அவன் சித்தோபாயமாக இருப்பவன்; ஆதலால் அவனைத் தாமதித்து அநுபவிக்கக் காரண்ம் இல்லை; 'அவனே உபாயம்’ என்ற கோட்பாட்டையும் மீறித் தான் நினைத்த பேற்றினை உடனே பெற வேண்டுமென்று பதற்றத்தையுடையவளாக இருக்கின்றாள்.