பக்கம்:வைணமும் தமிழும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

வைணவமும் தமிழும்


தியானத்தின்மூலம் ஆன்மாதன் உண்மை நிலையை உணர்ந்து தான் இறைவனைச் சார்ந்திருக்கும் நிலையை அடைகின்றது. அதன்பிறகு அஃது இறைவனை அடைய அவாக்கொள் ளுகின்றது.

          கையபொன் ஆழிவெண் சங்கொடும்
              காண்பான் அவாவுவன்நான்
          மையவண்ணா!மணியே! முத்தமே!
              என்றன் மாணிக்கமே! (திரு விருத்84)


      [கைய கைகளிலுள்ள மைய மையுடைய நிறம்]

என்ற பாசுரத்தில் பராங்குசநாயகி எம்பெருமானாகிய நாயகனைக் காண விரைகின்றாள். தனிமையில் கண்டு கூடிக் குலவி இன்புற வாய்ப்பில்லையாயினும், ஆடவரும் மகளிரும் பலர் கூடிய கூட்டத்திலாயினும் காணப்பெற்றாலும் அது கொண்டு ஆறியிருப்பதாகச் சொல்லுகின்றாள். நாயகனையே இடைவிடாது நினைத்துக் கொண்டிருந்து அந்நினைப்பு மிகுதியால் அவன் எதிரில் நிற்பதாகப் பாவித்து மைய வண்ணா, மணியே, முத்தமே, மாணிக்கமே என்று முன்னிலைப் படுத்திப் பேசுகின்றாள். இன்னொரு பாசுரத்தில் ஆழ்வார் நாயகி “என் ஆசையை அடக்கமாட்டாமல் வினையொடும் எம்மொடும் நொந்து, கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனம்” (64) என்கின்றாள். ஈண்டு. கனி பகவதது.பத்தாலாகும் இனிய ஆனந்தத்திற்கு உவமை, கட்டிளமைத்தாய் நுகரும் செவ்வியல்லாததாய் அவ்வளவு இனியதல்லாத நமோச்சரன மாத்திரத்திற்கு உவமை. காயின் முதிர்ச்சி கணியாதல்போல், நமோச்சரணத்தின் பயன் அது பவாநந்தமாகும் என்பது உவமையால் உய்த்துணர