பக்கம்:வைணமும் தமிழும்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

273


உய்வித்தான் என்பதைப் பாசுரத்தின்மூலம் விளக்குகின்றார் தூப்புல் புலவர் தேசிகர்.

(ii). பிரபத்திநெறி: உயர்ந்தோர் தாழ்ந்தோர், கற்றவர். கல்லாதவர் என்ற வேறுபாடின்றி எல்லோராலும் மேற் கொள்ளக்கூடிய நெறியே பிரபத்தி நெறியாகும்8 இந்தநெறி சரணாகதி 'பரந்யாசம்' 'பரசமர்ப்பணம்' "உபாயாதுஷ்டானம்” என்ற பெயர்களாலும் வழங்கப்பெறும். சர்வஇரட்சகனான எம்பெருமானின் கருணையின்மீது பெரு நம்பிக்கை கொள்வதே இந்நெறியைக் கடைப்பிடிப்போரிடம் வேண்டப் பெறுவது. பகவத்கீதையில் சரமசுலோகத்தில், பேசப்பெறு வதும் இந்நெறியேயாகும். மணிவாசகப்பெருமானும் இச் செந்நெறியைக்குறிப்பிடுகின்றார் (திருவா அடைக்கலப்பத்து.

இப்பிரபத்திநெறியில் ஐந்து அங்கங்கள் இருப்பதைக் காட்டுவர் ஆசாரியப் பெருமக்கள், முதலாவது ஆநுகூல்ய சங்கற்பம் என்பது. இது எம்பெருமான் திருவுள்ளத்திற்கு உகந்தவற்றைச்செய்வதாக உறுதிகொள்ளலாகும்.இரண்டாவது பிராதிகூல்யவர்ஜனம் என்பது. அவன் திருவுள்ளத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யாதிருக்க உறுதிகொள்ளல்; அல்லது அவற்றைச் செய்யாது விடுதலாகும் இது. மூன்றாவது மகாவிசுவாசம் என்பது. அவன் நம்மைக் காக்கவல்லவன் என்று தேறி, தவறாது நம்மைக் காப்பான் என்று உறுதியாக நம்புதலாகும் இது. நான்காவது கோபத்ருவரணம் என்பது,


8. பிரப்த்தி-சரண் அடைதல்; பிர-சிறப்பது. செல்லல்,அடைதல்; பிரபத்தி - சிறப்பாக அடைதல். சிறப்பாவது - மனத்தால் அடைதல், இதுசரண் அடைதல் எனப் பொருள்படும்.

9. கீதை-18:66