பக்கம்:வைணமும் தமிழும்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

வைணவமும் தமிழும்


ஓர் அணுவும் அசையாது’ என்பது முதுமொழி. ஒருவன் விரும்பினதை வேறொருவன் விரும்பாதபடி உலகமே வெவ் வேறு விருப்பத்தையுடையதாயினும் எல்லோரும் நீரை விரும்பியேயாகவேண்டும்; அதுபோலவே எம் பெருமானையும்

(iii). நீருக்குக் குளிர்ச்சி இயற்கை வெப்பம் வந்தேறி, எம் பெருமானுக்கு தண்ணளி இயற்கையாய்ச் சீற்றம் வந்தேறியா யிருக்கும். “நீரிலே நெருப்புக் கிளருமாப்போலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால்” (முமுட்சு127) என்ற திவ்விய சூக்தி காண்க

(iv). நீர் நம் விருப்பப்படித் தேக்கி வைக்கவும் ஒடவிடவும் உடையதாயிருக்கும். எம்பெருமான் இயல்பும் அப்படியே. ஆண்டாள் தான் சூடிக்களைந்த மாலையிலே விலங்கிட்டு வைத்துப் பூசித்தான் எம்பெருமான்; பாண்டவர்க்காக கழுத்திலே ஓலைக் கட்டித் தூது நடந்தான்.

(v). நீர் சுட்டாலும் அதனை ஆற்றுவதற்கு நீரே வேண்டும். ‘தருதுயரம் தடாயேல் உன்சரண் அல்லால் சரண் இல்லை” (பெரு திரு. 51) என்றார் குலசேகரப்பெருமாள்.

(vi). நீரானது மற்ற பண்டங்களைச் சமைப்பதற்குக் கருவியாயுமிருக்கும்; தனிப்படத் தானே குடிக்கத் தக்கதுமா யிருக்கும். எம்பெருமானுக்கும் உபாயத்துவம் (வழி) உபேயத் துவம் (பேறு) என்ற இரண்டு தன்மைகள் உண்டல்லவா? எம்பெருமானைக் கொண்டு வேறு பலன்களைப் பெற விரும்புவாரும் எம்பெருமான் தன்னையே புருஷார்த்தமாகக்” கொள்வாரும் உள்ளமை காண்க.


10. புருஷார்த்தம் - புருஷன் + அர்த்தம்; புருஷன்- ஆன்மா, அர்த்தம்பொருள். ஆன்மா அடையும் பொருள் வீடுபேறு.