பக்கம்:வைணமும் தமிழும்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

வைணவமும் தமிழும்


இடையர், தயிர்தாழி, கூனி, மாலாகாரர், பினவிருந்து வேண்டடிசிலிட்டவர், அவன் மகன், அவன் தம்பி, ஆனை, அரவம், மறையாளன், பெற்ற மைந்தன்’ என்னும்படியிறே பகவத் விஷயீகாரம் பெற்றவர்களிருப்பது.

(viii). மேகம் மழைக் காலத்தில் பெருமுழக்கமிட்டுப் போய்விடும். மழை பெய்யாது; பெய்யுங்காலத்தில் ஆடம்பர மறப்பெய்யும். எம்பெருமான் குசேலனுக்கு அருள் செய்தபடி இங்ஙனமன்றோ?

(ix). விராடபர்வ காலட்சேபத்துக்கு வரும் மேகம், பகவத் விஷய காலட்சேபங்களிலே வந்து நிற்பான் எம்பெருமான், ‘ஸ்ரீசைலேசதயாபாத்ர (தனியன்) என்று வந்தார் அன்றோ அரங்கநாதன் பெரிய ஜீயர்கோஷ்டியிலே?

(x). சுக்திகளிற் பெய்து முத்தாக்கும் மேகம்; அடியார்க்கு இன்பமாரியாகிய (திருவாய் 4.5:10) கடாட்சதாரையும் ஆழ்வார்கள்ஆசாரியர்களிடத்தே பிரவகித்து மிக்க பயன் விளைக்கு மிறே.


12. ஆசா ஹிரு 228 (புருடோத்தம நாயுடு பதிப்பு) வேடன்-குகன் வேடுவிச்சி-சபரி, பட்சி-சடாயு, குரங்கு-சுக்கிரீவன்; சராசரம்அயோத்தியில் வாழும் சராசரம், இடைச்சி- சித்தயந்தி; இடையர் - ததியாண்டன், தயிர்தாழி-ததி பாண்டனுடைய தாழி, கூனிகிருட்டிணாவதாரத்தில் கண்ணனுக்குச் சந்தனம் தந்தவள்; மாலாகாரர்- கண்ணன் காலத்து பக்தர்; பினவிருந்து - இதையிட்ட கண்டாகர்ணன்; வேண்டடிசில் இட்டவர்பக்தவிலோசனத்து ரிஷிபத்தினிகள்; அவன் மகன்-பிரகலாதன் அவன்தம்பி - வீடணன்; ஆனை-கஜேந்திராழ்வான்; அரவம்சுமுகன்; மறையாளன் - கோவிந்தசாமி, பெற்ற மைந்தன் - மார்க்கண்டேயன் ஆக பதினெண்மர்.