பக்கம்:வைணமும் தமிழும்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

319


இழந்த பரதன் அவையில் கதறியழுதானன்றோ? “பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்” (முதல் திருவந் 16), “இன்பத்தை இழந்தபாவியேன் எனதாவி நில்லாதே” (பெரு. திரு.7:4)'உன்னைக் காண்டான் நான் அலப்பு ஆய் ஆகாயத்தை நோக்கியழுவன்” (திருவாய் 5.8:4) என்றிப்படியெல்லாம் கதறியழுவார்கள்.

(iv). இரத்தினமுடையவன் மார்பு நெறிப்பன். எம் பெருமானைக் கைக்கொண்டவர்களும் “எனக்கு யாரும் நிகரில்லையே இராமாநூற்47),"மாறுளதோ இம்மண்ணின் மிசையே?’ (திருவாய் 64:9), “எனக்கென்னினி வேண்டுவதே” (திருவாய் 644),"இல்லையெனக்கெதிரே" (பெருந்தொகை1438) என்று செருக்கிப் பேசுவார்கள்.

(v). இரத்தினம் பெற்றுள்ளவனை a wzi ersbevr தொடரும். எம்பெருமானைக் கைக்கொண்டவனையும் அப்படியே. -

(vi). இடையில் ஒரு புருஷனைக் கொண்டே இரத்தினம் வாங்கப்படும். புருஷகாரமின்றி எம்பெருமானைப் பெற முடியாது. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” (திருவாய் 46:8).

(vii). இரத்தினத்திற்குச் சில ஆதாரங்களில் (ஆச்ரயங் களில்) மதிப்பு அதிகப்படும். எம்பெருமானுக்கும் அப்படியே ஆழ்வார்கள் திருவாக்கில் புகுந்து புறப்பட்ட திருப்பதிகளில் அன்றோ எம்பெருமானுக்கு மதிப்பு அதிகம்?

(viii). இரத்தினம் ஒளியைவிட்டு இராது.எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான்,